தூத்துக்குடி : தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மெகா கூட்டுத் தூய்மைப்பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கிவைத்தார்.
தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா நாளை 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக.6ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் சொரூப பவனி ஆகஸ்ட் 5ம்தேதி இரவு நகர வீதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள், தேர் பவனி வரும் வீதிகளை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
இந்த மெகா கூட்டு தூய்மைப் பணியை ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து கூறுகையில், தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 180, ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளர்கள் மெகா கூட்டு தூய்மைப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
வரும் 6ம்தேதி வரை ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளிலும், செயின்ட் மேரிஸ் கல்லூரி வரையிலும் உள்ள பகுதிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.
அப்போது, பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகர்நல அலுவலர் சரோஜா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், வட்ட செயலாளர் டென்சிங், கவுன்சிலர் ரிக்டா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மெகா கூட்டு தூய்மைப்பணி appeared first on Dinakaran.
