மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர், கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதளிக்கப்படும். இந்த விருது பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.6.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.6.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாநில அரசு விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.