கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தை சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாய மேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் ஊரில் இருந்து நேற்று இரவு மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.
விருத்தாசலம் அருகே சேலம் புறநகர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே நடத்து செல்லும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருதயசாமி அவரது மகள் சகாய மேரி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காயமடைந்தவர்களை ஆம்பிலன்ஸ் மூலம் மீட்டு விருந்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஆனந்தி மேல் சிகிச்சைகாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
The post விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி appeared first on Dinakaran.