இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் விரைவில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் அந்த தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்திற்குள் வசிப்பவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
The post காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.