சென்னை : சென்னை வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் கோரியுள்ளது.6.65 ஏக்கரில் ரூ.800 கோடியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைகிறது. தரை தளத்தில் நவீன பேருந்துநிலையம், 1,475 பைக்குகள், 214 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படுகிறது.
10 தளங்கள் வரை கார்ப்பரேட் அலுவலகங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமையவுள்ளது. 11 மற்றும் 12ஆம் தளங்களில் அனிமேஷன், கேமிங், காமிஸ் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.பேருந்து முனையத்தின் 5-வது தளத்தில் உணவு மையம், மாடியில் சோலார் பேனல் அமைகிறது.
The post வடபழனியில் வணிக வளாகத்துடன் பேருந்து முனையம் appeared first on Dinakaran.