சென்னை: தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகி ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஐஜியாகவும், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும், சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக எஸ்.பி. நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வாணைய எஸ்.பியாகவும், சென்னை தலைமையக எஸ்.பி அமனத் மன், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஐஜியாகவும், சென்னை பயிற்சி பள்ளி எஸ்.பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாகவும், சேலம் தலைமையக துணை ஆணையர் கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராகவும், நெல்லை நகர் மேற்கு துணை ஆணையர் கீதா, சேலம் தலைமைய துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் நகர் தெற்கு துணை ஆணையர் வேல் முருகன், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையராகவும், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும், நாகப்பட்டிணம் எஸ்.பி.அருண் கபிலன், சென்னை தலைமையக துணை ஐஜியாகவும், குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி செல்வகுமார், நாகப்பட்டிணம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராகவும், குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 3 பேருக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.