2வது டி20 போட்டியில் சீறிய வங்கதேசத்தை சிதறடித்த எமிரேட்ஸ்: 2 விக். வித்தியாசத்தில் வெற்றி

 

ஷார்ஜா: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அபாரமாக ஆடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 17ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில், வங்கதேசம், 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், 2வது டி20 போட்டி, ஷார்ஜாவில் நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச துவக்க வீரர்கள் தன்ஸித் ஹசன், கேப்டன் லிட்டன் தாஸ் அபாரமாக ஆடி சிறப்பான துவக்கத்தை தந்தனர்.

9வது ஓவரில் அணியின் ஸ்கோர் 90 ஆக இருந்தபோது, ஹசன், 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ஜவாதுல்லா பந்தில், லிட்டன் தாஸ் 40 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோரில், நஜ்முல் ஹோசேன் ஷான்டோ 27, தவ்ஹித் ஹிரிதோய் 45 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. அதையடுத்து, 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் எமிரேட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் முகம்மது ஸொயப், கேப்டன் முகம்மது வாஸீம் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணியின் ஸ்கோர் 107 ஆக இருந்தபோது ஸொயப் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின் வந்த ராகுல் சோப்ரா 2 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் கேப்டன் வாஸீம் 42 பந்துகளில் 82 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.5 ஓவர் முடிவில், எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post 2வது டி20 போட்டியில் சீறிய வங்கதேசத்தை சிதறடித்த எமிரேட்ஸ்: 2 விக். வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: