21 ஓவர் முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் மட்டுமே எடுத்தது. அதையடுத்து, 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகளில் ஒருவரான சோபியா டங்லீ 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனையும் கேப்டனுமான, நாட் சிவர் பிரன்ட் அட்டகாசமாக ஆடி, 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ரன் விளாசினார். ஆலீஸ் கேப்சி 11 பந்துகளில் 20 ரன் எடுத்தார். 10.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 109 ரன்களை குவித்தது. அதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாரா கிளென் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post சுருங்கிய போட்டியில் சுருண்ட வெ.இ.; இங்கிலாந்து மகளிர் இமாலய வெற்றி: 3-0 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது appeared first on Dinakaran.