பின் வந்தோரில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (11 ரன்), கருண் நாயர் 40 ரன்), துருவ் ஜுரெல் (52 ரன்), நிதிஷ் குமார் (34 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், 62வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர், 168 பந்துகளை சந்தித்து, ஒரு சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 116 ரன் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால், இந்தியா ஏ, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 319 ரன் குவித்தது. இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3, ஜார்ஜ் ஹில் 2, ஃபர்ஹான் அஹமது, டாம் ஹெய்ன்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
The post இங்கிலாந்து லயன்ஸுடன் டெஸ்ட் இந்தியா ரன் குவிப்பு: ராகுல் அதிரடி சதம் appeared first on Dinakaran.