மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா க்ருனிக், கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினா இணை, நார்வேயை சேர்ந்த உல்ரிக்கே பியா ஐக்கேரி, ஜப்பானின் எரி ஹோஸுமி இணையுடன் மோதியது. முதல் செட்டை உல்ரிக்கே இணை 7-6 (7-5) என்ற செட் கணக்கில் டைபிரேக்கரில் கைப்பற்றியது. 2வது செட், க்ருனிக் இணை வசம், 6-3 என்ற கணக்கில் சென்றது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் இரு இணைகளும் சளைக்காமல் ஆடினர். கடைசியில், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய க்ருனிக் இணை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டன் இணை வெற்றி: இறுதி சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.