இந்நிலையில், சின்னர் – அல்காரஸ் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் போராடியதால், டை பிரேக்கர் வரை நீண்டது. பின், அந்த செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை சின்னர் எளிதில் இழந்தார். அதனால், 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காரஸ் சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் வசப்படுத்தினார். பட்டம் வென்ற அல்காரசுக்கு 1000 புள்ளிகளும் ரூ. 9.35 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. 2ம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ. 4.97 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ் சின்னரை சிதறடித்து அல்காரஸ் சாம்பியன்: இறுதி போட்டியில் அசத்தல் appeared first on Dinakaran.