மேலும் அதர்வா – கயாடு லோஹர் நடிக்கும் இதயம் முரளி, சிம்புவின் 49வது படத்தையும் தயாரித்து வருகிறார். இது தவிர மேலும் சில படங்களை தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்த ஆகாஷ் பாஸ்கரன் எப்படி திடீர் என்று இவ்வளவு படங்களை தயாரிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில், நடிகர்கள் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை 6.15 மணி முதல் 07.30 மணி வரை, இவர் வசிக்கும் தேனாம்பேட்டை, கேபி. தாசன் சாலையில் அப்பார்ட்மென்டில் PY-01, DC-1951 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது. எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
The post சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.