கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து 8 பேர் உயிர் தப்பினர்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த 8 சுற்றுலாப்பயணிகள் காரில் வந்து கொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 8 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்தில் சிக்கிய காரை மீட்டனர்.

The post கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து 8 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: