கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி: விருத்தாசலத்தில் சோகம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முஷ்ணம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் நேற்று முஷ்ணத்தில் இருந்து சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் விருத்தாசலம்- சேலம் புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரமாக பாத யாத்திரையாக சென்றவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கூலித்தொழிலாளியான இருதயசாமி (50), அவரது மகள் சகாயமேரி (18) மற்றும் ஸ்டெல்லா மேரி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அமுதன்(21), சார்லஸ் யுவாங்கோ(21), ரோஸ்லின் மேரி (40), ஆனந்தி (21) ஆகிய 4 பேர் படுகாயமடந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி: விருத்தாசலத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: