பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகியபட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.
விண்ணப்பங்கள் 21.04.2025 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு , பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட , பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்க இறுதி தேதி சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 21.05.2025
விண்ணப்பகட்டணம்- ரூ.200/-
For SC/ST – ரூ.100/
(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)
விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/-(SC/ST – ரூ. 100/-) மற்றும் தபால் கட்டணம் ரூ.50/-க்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவுஅஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர்கள் (சேர்க்கை)
முனைவர் இரா.ரமேஷ்குமார், இணைபேராசிரியர் / HOF
Mobile No. 9884159410
முனைவர் ச. கார்த்திகேயன், உதவி பேராசிரியர்
Mobile No. 9965899822
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
மின்வாரியசாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்)
அம்பத்தூர், சென்னை – 600 098
தொலைபேசி எண். 044 – 29567885 / 29567886
Email: tilschennai@tn.gov.in
The post வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.