சேலம்,மே 8: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் முதல் சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம்மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம், மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், மேட்டூர் தொகுதியின் இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ், மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் நாகம்மாள் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுடன் விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் கிருஷ்ணராஜன் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணராஜன் கூறும்போது, கட்சியின் செயல்பாடு சரியில்லாமல் உள்ளது. இதனால் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். தற்போது என்னுடன் பயணித்த 100 உறுப்பினர்களும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளோம்,’’ என்றார்.
The post நாதகவில் இருந்து 100 பேர் விலகல் appeared first on Dinakaran.