திட்டக்குடி, மே 8: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள மேல்ஆதனூர் கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 70 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. நேற்று மதியம் அவ்வழியாக அப்பகுதி பொதுமக்கள் சென்றபோது, கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. கிணற்றை எட்டி பார்த்தபோது அழிகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்த நிலையில் இருந்துள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விருத்தாசலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்ப்பட்டு, அவர்கள் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆ.குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ் (26) என்பது தெரியவந்தது. இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, யாரேனும் அடித்து கொலை செய்து
கிணற்றில் வீசினரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ராமநத்தம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.