விருத்தாசலம், மே 8: கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் விளைவித்த நெல், மணிலா, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், உளுந்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தற்போது எள் அறுவடை பணிகள் முடிவடைந்து எள் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
நேற்று 80 கிலோ எடை கொண்ட 900 எள் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. இதில் எள் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 839 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 499 ரூபாய்க்கும் சராசரியாக விலையாக 8 ஆயிரத்து 419 ரூபாய்க்கும் விலை போனது. மேலும் மணிலா அதிகபட்ச விலையாக 7 ஆயிரத்து 909 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 461 ரூபாய்க்கும், சராசரி விலையாக 6 ஆயிரத்து 619 ரூபாய்க்கும் விலை ஆனது. 500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.
இதில் பிபிடி நெல் ரகம் அதிகபட்சமாக ஆயிரத்து 929 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஆயிரத்து 641 ரூபாய்க்கும், ஏடிடி 51 நெல் ரகம் அதிகபட்சமாக ஆயிரத்து 596 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஆயிரத்து 420க்கும் விலை போனது. மற்ற தானிய பொருட்களான உளுந்து அதிகபட்சமாக 6 ஆயிரத்து 139 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 3 ஆயிரத்து 189 ரூபாய்க்கும், வரகு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 55 ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 759 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 9 ஆயிரத்து 039 ரூபாய்க்கும் சராசரி விலையாக 12 ஆயிரத்து 539 ரூபாய்க்கும் விலை போனது.
The post விருத்தாசலம் ஒழுங்குமுறை கூடத்தில் 900 எள் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது appeared first on Dinakaran.