திண்டிவனம், மே 6: திண்டிவனம் அடுத்த ராஜாம்பேட்டை தெருவில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக சிற்றரசு பணியாற்றி வருகிறார். இவரிடம் 28வது வார்டு கவுன்சிலர் சந்திரன் பெண் ஒருவருக்கு திருமணத்துக்காக இருப்பிட சான்றிதழ் கேட்டதாக தெரிகிறது. இதில் தாமதம் ஏற்படவே சந்திரன், ஆதரவாளர்களுடன் சென்று விஏஓ சிற்றரசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து விஏஓக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர், திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த கவுன்சிலர் சந்திரன் (37), அதே பகுதியை சேர்ந்த துரைக்கண்ணன் மகன் அரிகிருஷ்ணன் (37), செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் கணேஷ் (24), எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த எட்டியப்பன் மகன் அஜித் (26) ஆகியோரை கைது செய்தனர்.
The post விஏஓவை தாக்கிய கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.