பூந்தமல்லி அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மாங்காடு, குன்றத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 33 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post பூந்தமல்லி அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: