புதுக்கோட்டை மாவட்டத்தில் இ-வாடகையில் சேவை வழங்குநர்கள் விண்ணப்பிக்கலாம் : கைப்பேசி செயலியில் ரூ.500 செலுத்தி பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையில் தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலியில் சேவை வழங்குநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேவை வழங்குநர் குறைந்தது 18 வயது உடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள சேவை வழங்குநர்கள் தங்களது பெயரை ஆதார் அட்டையின்படி தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். சேவை வழங்குநர் இச்செயலிக்கான தளத்தில் பதிவு செய்ய திரும்ப பெற இயலாத ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.500 இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். சேவை வழங்குநர்கள் வேளாண்மைப் பொறியியல் துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும். சேவை வழங்குநர் ஒரு ஆண்டராய்டு கைபேசியினை வைத்திருக்க வேண்டும் மற்றும் பதிவு செய்வதற்காக அந்த கைபேசி எண்ண மட்டுமே அளிக்க வேண்டும்.

தகுதிச் சான்றுகள் அவசியம்: சேவை வழங்குநர் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேளாண் இயந்திரங்களின் பதிவுச் சான்றிதழ், இயந்திர தகுதி சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் காலாவதி ஆகாமல் போக்குவரத்து ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சேவை வழங்குநர்கள் அனைத்து வேளாண் இயந்திரங்களும் பணி செய்வதற்கேற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கைபேசி செயலில் பதிவு: சேவை வழங்குநர்கள் இச்செயலியில் பதிவேற்றப்படும் இயந்திரங்களை வேளாண் பணிகளுக்கு மட்டுமே வாடகைக்கு விட வேண்டும். இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர் தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலியில் உள்ள உரிய விவரங்கள் பதிவுகள் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், விவரங்கள் அறிய வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களான உதவி செயற்பொறியாளர் (வே.பொ), திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, கைபேசி எண் 9443405997 என்ற அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), நைனா முகமது கல்லூரி அருகில், இராஜேந்திரபுரம், அறந்தாங்கி, கைபேசி எண் 9500988606 என்ற அலுவலகத்தையும், செயற்பொறியாளர்(வே.பொ), திருச்சிமெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 என்ற அலுவலகத்தையும் அணுகி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் இ-வாடகையில் சேவை வழங்குநர்கள் விண்ணப்பிக்கலாம் : கைப்பேசி செயலியில் ரூ.500 செலுத்தி பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: