திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பணம் பறித்த ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் கைது

அண்ணாநகர்: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்றிய ஜிஎஸ்டி அலுவலக பணியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் புகார் அளித்தார். அதில், திருமங்கலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தங்கியிருந்து தனியார் கம்ெபனியில் வேலை செய்து வருகிறேன். எங்கள் பகுதியை சேர்ந்த சதீஷ் (33) என்பவர் தேவாலயத்துக்கு வரும்போது நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இதன்பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர் அடிக்கடி பணம் கேட்டதால் கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் வரை அனுப்பிள்ளேன்.

பலமுறை என்னுடன் ஜாலியாக இருந்தார். பிறகு என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது எனது நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து நம்பிக்கை மோசடி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருமங்கலத்தில் உள்ள அரசு குடியிருப்புக்கு போலீசார் சென்றபோது சதீஷ் தலைமறைவாகிவிட்டார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து ேதடியபோது அவர் வெளி மாவட்டங்களில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து கண்காணித்து, சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே கடந்த 7 மாதத்துக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் வளாகத்தில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் சதீஷை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பணம் பறித்த ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: