பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சை பதிவு: 16 பேர் கைது

கவுகாத்தி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரியவகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நேற்று மாலை வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தகைய கருத்துகளை பதிவிட்ட எதிர்க்கட்சியான ஏஐயுடிஎப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சை பதிவு: 16 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: