இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி: கனடா நாட்டை சேர்ந்தவர் கைது

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து பெங்களுரூவுக்கு நேற்று முன்தினம் இரவு இன்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த வௌிநாட்டு பயணி ஒருவர் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை ஏற்படுத்தினார். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் குழுவினருடன் விரைந்து வந்து விமானத்தை சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய கனடா நாட்டு பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி: கனடா நாட்டை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: