ரவுடி தனத்தை கைவிடும்படி அறிவுரை கூறிய பெயின்டரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை


சென்னை: பெயின்டரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்ணா நகரை சேர்ந்த ரவுடி சந்தானம். இவர், திருந்தி பெயின்டராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த ராபர்ட், அவரது சகோதரர் ஜோசப் உள்ளிட்டோரிடம், ரவுடி தனத்தை கைவிடும்படி சந்தானம் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தாயை பார்க்க வந்த சந்தானத்தின் மீது மிளகாய் பொடியை தூவி, வெட்டிக் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா நகர் போலீசார், ராபர்ட், ஜோசப் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் சிறார் என்பதால் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த போது ராபர்ட் உயிரிழந்தார். மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோசப், சதீஷ், விமல்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post ரவுடி தனத்தை கைவிடும்படி அறிவுரை கூறிய பெயின்டரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: