தகாத உறவை கண்டித்ததால் கணவன் கொலை; மனைவி, காதலனுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் திண்டல் அருகே பிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (35), லாரி டிரைவர். இவரது மனைவி நதியா (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நதியாவிற்கும், திண்டல் பகுதியை சேர்ந்த முரளி (30) என்பவருக்கும், பள்ளியில் படிக்கும்போதே பழக்கம் இருந்தது. இது திருமணமான பிறகு தகாத உறவாக மாறியது. இந்த விவகாரம் தெரியவர, நதியாவை மாரியப்பன் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மே 21ம்தேதி, மாரியப்பன், தனது தாய் மல்லிகா வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, காரிமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், நதியா, முரளி ஆகியோர் மாரியப்பனை முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது. இதில், மாரியப்பனை கொலை செய்தது உறுதியானதால், நதியா, முரளி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், முரளிக்கு ரூ.7 ஆயிரம், நதியாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.

The post தகாத உறவை கண்டித்ததால் கணவன் கொலை; மனைவி, காதலனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: