9 நாள் பழகி 3ம் திருமணம்; மதியம் ‘முதலிரவு’ மாலையில் மண்டை உடைப்பு: கல்யாண ராணி சீரியஸ்: லோடுமேன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஜெபவயலட் (25). இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் முடிந்த நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு அடிக்கடி கோர்ட்டிற்கு வந்து செல்லும் ெஜபவயலட், விசாரணைக்கு அழைக்கும் வரை அருகே உள்ள பார்க்கில் சென்று பொழுதை கழிப்பது வழக்கம். அதே பார்க்கிற்கு தூத்துக்குடி குருவிமேடு பகுதியைச் சேர்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவரும் அடிக்கடி வந்து செல்வார். லோடுமேனான இவரும் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்தவர்.

கடந்த 9 நாட்களுக்கு முன் ஜெபவயலட்டும், மாரிக்கனியும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தூத்துக்குடி டவுனில் உள்ள கோயில் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மாரிக்கனி, புதுமனைவி ஜெபவயலட்டை அழைத்துக் கொண்டு குருவிமேடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். மேலும் போகும்போது அப்பகுதியில் டாஸ்மாக் கடையில் 3 குவார்ட்டர்களை வாங்கிச் சென்றார். அதன்பிறகு மதியம் முதலிரவை கொண்டாடி விட்டு இருவரும் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மாரிக்கனி புதுமனைவியிடம் ‘எனக்கு 2 குவார்ட்டர், உனக்கு ஒரு குவார்ட்டர்’ என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் மது அருந்தும் போது ஜெபவயலட் தனது ஒரு குவார்ட்டர் மதுவையும் குடித்து விட்டு மாரிக்கனி வைத்திருந்த மதுவையும் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வைத்திருந்த மதுவை நீ எப்படி எடுத்து குடிக்கலாம் என்று கூறி மாரிக்கனி, ஜெபவயலட்டை சரமாரியாக தாக்கினார். மேலும் அருகில் கிடந்த உருட்டுகட்டையை எடுத்தும் தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபவயலட், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து வீட்டில் தவறி விழுந்து விட்டதாக கூறி அவரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாரிக்கனி சேர்த்தார்.

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்குபதிந்து மாரிக்கனியை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெபவயலட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 9 நாட்கள் பழகி காலையில் திருமணம் செய்து விட்டு மதியம் முதலிரவு கொண்டாடி மாலையில் மரண அடி வாங்கிய கல்யாண ராணிக்கு நேர்நத சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 9 நாள் பழகி 3ம் திருமணம்; மதியம் ‘முதலிரவு’ மாலையில் மண்டை உடைப்பு: கல்யாண ராணி சீரியஸ்: லோடுமேன் கைது appeared first on Dinakaran.

Related Stories: