ஐடி பெண் ஊழியரிடம் ஓடும் பஸ்சில் பாலியல் சீண்டல்: கண்டக்டர் கைது


நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கோவையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து நெல்லைக்கு வரும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அவரிடம் கண்டக்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண், தனது பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த பஸ் நெல்லை புதிய பஸ்நிலையம் வந்த நிலையில், பஸ் கண்டக்டரான கோவையைச் சேர்ந்த மகாலிங்கம் (43) என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து கைது செய்தனர்.

The post ஐடி பெண் ஊழியரிடம் ஓடும் பஸ்சில் பாலியல் சீண்டல்: கண்டக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: