பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது


நாகர்கோவில்: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் ஆயுதப்படையில் காவலராக உள்ளார். நேற்று முன் தினம் இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், எஸ்.பி.க்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீது வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: