ஊட்டி, மார்ச் 28: நீலகிரி மாவட்டத்தில் நல வாரியம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள், ஆயுள் சான்றினை வரும் ஏப்ரல் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு உள்ளிட்ட இதர தொழிலாளர் நல வாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் 2024-25ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்பட நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2448524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post நல வாரியம் மூலம் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை ஏப்ரல் 30க்குள் சமர்ப்பிக்க அறிவுரை appeared first on Dinakaran.