வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி; எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கோவை, ஏப் 3: வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை திரும்ப வலியுறுத்தி நேற்று உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகு வர்த்தி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த சட்டம் முஸ்லிம்களை வஞ்சிக்கும் செயல். முஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் இது போன்ற கடுமையான சட்டங்களை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் சொத்துகளை அபரிகரிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹீம், தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநில பேச்சாளர் அபுதாஹிர், மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராகிம் பாதுஷா, காமிலா பானு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் காதர், முகமது இக்பால், அப்பாஸ், வர்த்தக அணி மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்பாஸ், வுமன் இந்தியா மூவ்மென்ட் நிர்வாகிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி; எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: