பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்.25ம் தேதி வரை கோவையில் நிற்காது

 

மதுக்கரை, ஏப்.5: சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ரயில் எண்-16844 பாலக்காடு டவுன்- திருச்சிராப்பள்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை போத்தனூர், இருகூர் சந்திப்பு வழியாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில், கோயம்புத்தூர் சந்திப்பு, வடகோவை மற்றும் பீளமேடு ஆகிய நிலையங்களில் நிற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

 

The post பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்.25ம் தேதி வரை கோவையில் நிற்காது appeared first on Dinakaran.

Related Stories: