கோவை மருதமலை கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு 1500 போலீசார் பாதுகாப்பு

 

கோவை, ஏப். 4: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். முருகனின் ஏழாம் படை வீடான கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாம் கால வேள்வி துவங்கி இன்று வரை வேள்விகள் நடத்தப்பட்டு காலை 8.30 மணிக்கு கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி போலீசார் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, விழாவுக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்புக்காகவும் வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post கோவை மருதமலை கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு 1500 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: