தாயனூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு

 

காரமடை, ஏப்.9: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் பிரிசோனாஸ்ரீ, மேதினி, மிகிரா, ஓவியதர்ஷினி, பிரதீபா, மணிபிரியா, பொன்மணி, முத்துலட்சுமி உள்ளிட்டோர் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக காரமடையை அடுத்துள்ள தாயனூரில் இம்மாணவிகள் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, தினமும் அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு வழங்கும் தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

கீரைகள், பழ வகைகள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

The post தாயனூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: