பெ.நா.பாளையம்,ஏப்.3: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி விஷ்ணு நகரை சேர்ந்தவர் லட்சுமி கனி இளங்காளை (42). வண்ணான் கோவில் அருகே காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று இவர் தனது மகளை கூட்டிக்கொண்டு கடைக்கு சென்று விட்டார். மகன் தனது பள்ளி நண்பருடன் வீட்டிலிருந்துள்ளார்.இரவு 7.30 மணி அளவில் லட்சுமிகனி இளங்காளையின் அண்ணன் இறந்து விட்டதாக தூத்துக்குடியில் இருந்து தகவல் வந்ததால்,உடனே மகனை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு வரும்மாறு கூறியுள்ளார்.
அவரது மகன் இரவு 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு கடைக்கு வந்து வேலைகளை முடித்துவிட்டு இரவு சுமார் 12 மணி அளவில் வீட்டிற்கு சென்று சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது,படுக்கை அறை கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.44,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.
லட்சுமி கனி இளங்காளை கொடுத்த புகாரின் படி பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கஸ்தூரி பாளையத்தை சேர்ந்த ஜெரால்டு ஸ்டீபன்(40) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது ஜன்னல் அருகே வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து பணத்தை திருடியதாக ஜெரால்டு ஸ்டீபன் போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
The post ஜன்னலில் வைத்திருந்த வீட்டின் சாவியை எடுத்து பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.