கோவை, ஏப்.4: கோவை போத்தனூர் ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்காக வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு மூலமாக பெண்கள் அச்சமின்றி ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று போத்தனூர் ரயில் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், இன்ஸ்பெக்டர் ருவாந்திகா மற்றும் போலீசார், பயணிகள் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு உதவிக்காக 139, 1512, 99625 00500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ் அப் குழு தகவல் மூலமாக பெண்கள் அச்சமின்றி பயணம் செய்யும் நிலைமை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
The post ரயிலில் பெண் பயணிகளுக்கு வாட்ஸ் அப் குழு appeared first on Dinakaran.