தாராபுரம், ஏப். 2: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வஞ்சிக்கும் செயலை கண்டித்து தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி சிறப்புரையாற்றினார் ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழிவாங்காமல் வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்கிட வேண்டும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான படியை வழங்க வேண்டும்,
வேலை நாட்களை குறைக்காமல் தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும், ஒரு நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும், ஒரு ஆண்டிற்கான வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும், நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர் பூங்கொடி, ஒன்றிய செயலாளர் மலையாண்டி, மூலனூர் ஒன்றிய செயலாளர் கருப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தாராபுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.