திருப்பூர், மார்ச்28: திருப்பூர் அம்மாபாளையம் அடுத்த ராக்கியபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (56). இவர் நல்லூர் அடுத்த செவந்தாம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த பிந்து என்பவர் அருணாசலம் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் சப்ளை செய்யும் இடைத்தரகராக செயல்பட்டார்.
இந்நிலையில் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 அறைகளை குடியிருப்பாளர்கள் சம்மதத்துடன் காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக பிந்து, அருணாசலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பிந்து தன்னுடைய மனைவி பிங்கி ரூட்,கணேஷ் டகுவா ஆகியோருடன் சென்று அருணாச்சலத்தை தகாத வார்த்தைகளில் திட்டி பிளேடால் காயப்படுத்தினர். இதுகுறித்து நல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பிந்து (27),பிங்கி ரூட்(28), கணேஷ் டகுவா (28)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
The post பனியன் நிறுவன மேலாளரை பிளேடால் கிழித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.