உடுமலை, மார்ச் 23: உலக வன நாளையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் உத்தரவின்பேரில், உடுமலை வனச்சரகம் மானுப்பட்டி பிரிவுக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் வனச்சரகர் மணிகண்டன், வனப்பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் வனத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பு, வன வள பாதுகாப்பு குறித்து வனச்சரக அலுவலர் மணிகண்டன் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.
The post உலக வன நாளையொட்டி மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.