நகராட்சி சார்பில் வரி வசூல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நகராட்சி அதிகாரிகள் ஹூனாநாயக் செலுத்த வேண்டிய வரிபாக்கி உட்பட ரூ.20 ஆயிரம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால் ரூ.5,500 மட்டுமே கட்டியுள்ளார். மீதியுள்ள பணத்தை 15 நாட்களுக்குப் பிறகு செலுத்துவதாக கூறினாராம். ஆனால் இதை ஏற்க மறுத்த நகராட்சி அதிகாரிகள் ஹூனாநாயக் வீட்டிற்கு சென்று வீட்டின் கதவுகளை கழற்றி எடுத்துச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹூனாநாயக் வீட்டின் கதவுகள் கொடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என நகராட்சி அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து நேற்று இணையத்தில் பரவ செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நகராட்சிக்கு வரி பாக்கி; வீட்டு கதவுகளை கழற்றி சென்ற அதிகாரிகள்: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.