சட்டீஸ்கரில் 50 நக்சல்கள் சரண்

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதன்படி நக்சல் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்வது, என்கவுண்டரில் சுட்டு கொல்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுக்மா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பெண் நக்சல்கள் உள்பட 18 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்றார். அவரது சட்டீஸ்கர் பயணத்துக்கு முன், பிஜப்பூர் மாவட்டத்தில் 50 நக்சல்கள் சரணடைந்தனர். மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.

The post சட்டீஸ்கரில் 50 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.

Related Stories: