லண்டன்: இங்கிலாந்தில் ‘புல்’ போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியையை பணிநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இங்கிலாந்து நாட்டின் செஷயரின் ஹெல்ஸ்பியில் அமைந்துள்ள ஹார்ன்ஸ் மில் தொடக்கப் பள்ளியில் ஆஷ்லே அட்கின் (38) என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். அவர் பள்ளிக்கு மதுபோதையில் வந்தார். அவரால் நிற்கக் கூட முடியவில்லை. அந்தளவுற்கு போதையில் தள்ளாடிய நிலையில் இருந்தார். அவருடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் ஆஷ்லே அட்கினின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த ஆசிரியை, வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்.
அவரது ஆடைகள் கழன்று விழுவது கூட தெரியாமல் உளறிக் கொண்டிருந்தார். தங்களது ஆசிரியையின் நிலைமையை பார்த்த மாணவர்கள் திகைத்து போயினர். இவ்விசயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், உடனடியாக அந்த ஆசிரியையை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பின்னர் பள்ளியின் ஊழியர்கள் மூலம் அவரை அவரது வீட்டிற்கு பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். ஆசிரியை ஒருவர் போதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ‘புல்’ போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியை: பணிநீக்கம் செய்து வெளியேற்றிய நிர்வாகம் appeared first on Dinakaran.