வாஷிங்டன்: ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் சமீபத்தில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்,ஏமன் மீதான வான்வழி தாக்குதல் திட்டங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடக குழு கலந்துரையாடலில் தவறுதலாக பத்திரிகையாளருடன் பகிர்ந்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜனநாயக கட்சி எம்பி ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், ‘‘அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தகுதியற்ற பாதுகாப்பு அமைச்சர் பீட்டே ஹெக்செத். அவரை பதவியில் இருந்து அதிபர் டிரம்ப் நீக்க வேண்டும்’’ என்றார். ஜனநாயக கட்சியின் இன்னொரு எம்பி ரோன் வைடன், ‘‘அவரது நடத்தை மனச்சாட்சியை உலுக்குகின்றது. அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார். ஆனால் அதிபர் டிரம்ப் பேட்டியளிக்கையில்,‘‘இதில் ரகசிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஏமன் மீதான நடவடிக்கை குறித்த ராணுவ ரகசியங்கள் பகிரப்பட்ட விவகாரம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.