சுவாச தொற்றின் காரணமாக 5 வாரங்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டி விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் போப் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் மருத்துவமனையின் 10 வது மாடியில் இருந்து மக்களுக்கு அவர் ஆசிர்வாதம் வழங்கினார். வாடிகன் செல்லும் வழியில் சாலை நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். போப் 2 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
The post 38 நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.