இந்த நிலையில், நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள இடத்தை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், எம்எல்ஏக்கள் பொன்னேரி துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் நேற்று பார்ரவையிட்டனர். அங்கு வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் சிரமமின்றி நிகழ்ச்சியை கண்டுகளிக்க பந்தல் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது செங்குன்றம் துணை காவல் ஆணையர் பாலாஜி, பொன்னேரி உதவி ஆணையர் சங்கர், பொன்னேரி தாசில்தார் சிவகுமார், மாவட்ட திமுக அவைத்தலைவர் மு.பகலவன், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் உள்பட பலர் இருந்தனர்.
The post பொன்னேரி அருகே பெருஞ்சேரியில் முதல்வர் பங்கேற்க உள்ள விழாவுக்கு மேடை இடத்தை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.