உத்தரபிரதேச பேராசிரியரின் லீலைகள்; கல்லூரி மாணவிகளின் 65 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்: அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி அட்டூழியம்

லக்னோ: உத்தரபிரதேச கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், மாணவிகள் தொடர்பான 65 ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் செயல்பட்டு வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியின் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் (50) மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவரது பாலியல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் லக்னோ போலீசார் இவ்விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி சிரஞ்சீவ் நாத் சின்ஹா கூறுகையில், ‘கல்லூரி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் கடந்த 2008ம் ஆண்டு முதல் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் ரீதியாக பல்வேறு சில்மிஷங்களை செய்து வந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு கல்லூரியில் படித்த மாணவியுடன் உடலுறவு கொண்டபோது அறையில் மறைத்து வைக்கப்பட்ட வெப்கேமராவில், பாலியல் உறவு கொண்டதை பதிவு செய்துள்ளார். இதுபோல் பல மாணவிகளிடம் பாலியல் உறவு கொண்டுள்ளார். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாகவும், கல்லூரியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி அளித்து மாணவ, மாணவியர்களை ஏமாற்றி உள்ளார். இவரது வாக்குறுதியை நம்பி சில மாணவர்கள் அவருக்கு பணம் கொடுத்துள்ளனர். மாணவிகளிடம் ெநருக்கமாக வீடியோக்களை பாதுகாப்பதற்காக அவரது கம்ப்யூட்டரில் சிறப்பு மென்பொருள் பயன்படுத்தி உள்ளார். தற்போது அவரது கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போனில் இருந்து மட்டும் 65 ஆபாச வீடியோக்களை மீட்டுள்ளோம். இந்த ஆபாச வீடியோக்கள், சில ஆபாச வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரது அறையில் இருந்து யுஎபி ஃபிளாஷ், பேனா டிரைவ் மீட்கப்பட்டன. அவற்றில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளன. எத்தனை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்பது தெரியவில்லை. அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பிரச்னை செய்தால், மற்ற மாணவிகளின் பாலியல் பலாத்கார வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார். ரஜ்னிஷ் குமார் குறித்து விசாரித்த போது, அவருக்கு கடந்த 1996ல் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி அவருடன் இல்லை. குழந்தைகள் ஏதும் இல்லை. கடந்த 2001ம் ஆண்டு கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த அவர் கடந்தாண்டு புவியியல் துறை தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது தலைமறைவாக இருக்கும் ரஜ்னிஷ் குமாரை தேடி வருகிறோம். பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம்’ என்றார்.

The post உத்தரபிரதேச பேராசிரியரின் லீலைகள்; கல்லூரி மாணவிகளின் 65 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்: அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: