ஐதராபாத்தில் மே 7ம் முதல் மிஸ்வேர்ல்ட் போட்டி; இந்திய பாரம்பரிய புடவை அணிந்து வந்த உலக அழகி: நரசிம்ம சுவாமி கோயிலில் தரிசனம்

திருமலை: இந்திய பாரம்பரிய புடவை அணிந்து வந்த உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா தெலங்கானா மாநிலம் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். தெலங்கானா மாநிலத்தில் உலக அழகி போட்டிகள் மே 7 முதல் 31 வரை ஐதராபாத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். தெலங்கானாவில் 72வது உலக அழகி போட்டியை நடத்துவதால் அம்மாநில பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தலங்களை காட்சிப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா தெலங்கானா மாநிலம் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் நேற்றுமுன்தினம் சென்றார். இந்திய பாரம்பரியத்தின் படி, உலக அழகி புடவை அணிந்து கோயிலுக்கு வந்தார். அவருக்கு கலெக்டர் ஹனுமந்த ராவ் வரவேற்பு அளித்தார். பின்னர், கோயில் வழக்கப்படி அர்ச்சகர்கள் சுவாமி தரிசனம் செய்து வைத்து ஆசீர்வதித்தனர். அவர் பேசுகையில், ‘எனது இதயத்தில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் இருக்கிறது. இந்த நாடு எனது இதயத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது’ என்றார்.

The post ஐதராபாத்தில் மே 7ம் முதல் மிஸ்வேர்ல்ட் போட்டி; இந்திய பாரம்பரிய புடவை அணிந்து வந்த உலக அழகி: நரசிம்ம சுவாமி கோயிலில் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: