கர்நாடக சட்டமன்ற மன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது கர்நாடகத்தில் உள்ள பாஜவும் அதற்கு ஆதரவு அளித்தது. கூட்டாட்சி தத்துவத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாதுகாப்போம். பாதிக்கப்படும் மாநிலங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இது தென்மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதல். எங்கள் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம். தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ்குமார் கவுடு: தெலங்கானா வளர்ச்சி அடைகின்ற மாநிலம். 11 ஆண்டுகள் ஆன புதிய மாநிலம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தெலங்கானாவிற்கு கிடைக்கும் தொகுதிகள் குறையும். 2வது கூட்டு நடவடிக்கை குழு அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ்: முதலில் நாம் அனைவரும் இந்தியர்கள் அதன்பிறகுதான் தெலங்கானா மக்கள் என தோன்றும். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும்போது நமது குரல்களையும் நமது உரிமைகளையும் நாடாளுமன்றத்தில் இழக்க நேரிடும்.
தொகுதி மறுவரையறை செயல் நியாயமற்ற செயல். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதனால் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் வளர்ச்சியை இந்த தொகுதி மறுவரையறை செய்யும் போது இழக்க நேரிடும். சரியான நேரத்தில் இதை முன்னெடுத்துள்ளோம். இப்போது இதை பற்றி பேச வேண்டும். இதற்கு குரல் கொடுக்க வேண்டும். பிக் பாஸ் மாதிரி மத்திய அரசு செயல்பட கூடாது. தென் மாநிலங்களுக்கு எதிரான அநீதி என்பது புதிதது அல்ல. மாநிலங்கள் சார்ந்த வளர்ச்சியை மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு மேற்கொள்ளலாம். ஆனால் மாநிலம் சார்ந்த வளர்ச்சியை இந்தியா அளவில் கொண்டு போக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post இது தென்மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதல்; எங்கள் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம்: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.