சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்கள் சந்தித்து பேசினர். முகாமில் இருப்பவர்கள் சட்ட உதவிகள் பெற அவர்களுக்கான சிறப்பு சட்ட உதவி மையங்களும் திறக்கப்பட்டன. இக்குழுவினருடன் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி கோல்மெய் கய்புல்ஷிலு ஆகியோரும் உடனிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய நீதிபதி கவாய், ‘‘இந்திய அரசியலமைப்பு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க மாநில மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தேசிய சட்ட சேவைகள் ஆணையம், முன்னர் வழங்கிய ரூ.1.5 கோடியைத் தவிர, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக ரூ.2.5 கோடியை அனுமதித்துள்ளது.
அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 109 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலவரத்தினால் படிப்பை பாதியில் விட்டு சென்ற மாணவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்க வேண்டும்’’ என்றார். சுராசந்த்பூர் மெய்டீஸ் ஐக்கிய குழுவினர் நீதிபதி கவாயை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘வரலாற்று ரீதியாக சுராசந்த்பூர் மெய்டீஸ் சமூகத்தினருடையதாகும். மாவட்டத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பினால் மெய்டீஸ் சமூகத்தினரின் உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மெய்டீஸ் கிராமங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள மெய்டீஸ் மக்களும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதிபதிகளிடம் வழங்கினர்.
The post இனக்கலவரத்தால் பாதித்த மணிப்பூரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.