நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள செல்போன் எண்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ செயல்படாது : NPCI அறிவிப்பு!!

மும்பை : நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் பணப்பரிவர்த்தனை இயங்காது என தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலி மூலம் பணம் செலுத்தும் முறை பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. அதன்படி, இணையவழி மோசடிகளை தடுப்பதற்காக புதிய நடைமுறையை அமல்படுத்துவதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் கூறியுள்ளது.

அதன்படி ரீசார்ஜ் செய்யாததால் அழைப்பு அல்லது குறுந்தகவல் ஆகிய எந்த சேவையும் இல்லாத எண்ணுடன் யுபிஐ பயன்படுத்துவோர் செல்போன் எண்ணை மாற்றிவிட்டு தங்கள் வங்கி கணக்கின் தகவலை மாற்றாதவர்கள் வங்கி கணக்கில் எண்ணை நீக்காமல் தங்கள் செல்போன் எண்ணை சரண்டர் செய்தவர்கள் மற்றும் யுபிஐயில் உள்ள மொபைல் எண் வேறு யாருக்கேனும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தாலும் யுபிஐ இயங்காது. எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கியை அணுகி செயல்பாட்டில் உள்ள செல்போன் எண்ணை தங்கள் வங்கி கணக்குடன் இணைத்தால் தடையில்லாமல் சேவையை பெறலாம்.

The post நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள செல்போன் எண்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ செயல்படாது : NPCI அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: